மலரும் நினைவுகள்
நேரம் அறியாமல்
நானும், நீயும் வரப்புகளில்
கை கோர்த்து நடந்த நாட்கள்
மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு
நிலவின் கண்ணாமூச்சி விளையாட்டை
ரசித்த நாட்கள்
தட்டான் பூச்சி பிடித்து
வாலில் நூல் கட்டி
விளையாடிய நாட்கள்
உனக்கு முடியாமல் போன நாட்களில்
இருவருக்கும் விடுப்பு எழுதி
உன் அருகிலேயே இருந்த நாட்கள்
விடுமுறை என அறிந்ததும்
நமது பெயர்களை
மரத்தின் பின்னே எழுதி
திரும்பி வரும் போது
அவற்றைப் பார்த்து
குதூகலித்த நாட்கள்
இத்தனை சந்தோஷ நாட்கள் கூட
இயந்திர வாழ்க்கையில்
மறந்து விட்ட்து
இன்று தன் அப்பாவின்
கை பிடித்துச் செல்லும்
உன் குழந்தையைக் கண்டேன்
மறுபடியும்
என் எண்ணங்கள்
மலரும் நினைவுகளில்
Sunday, January 3, 2010
Saturday, January 2, 2010
Subscribe to:
Posts (Atom)