நிலாப்பெண்
மேக அலைகளுடன் போராடி
கரையை அனுகத் துடிக்கும்
நிலாப்பெண்ணே
திடீர் திடீரென
மறைகின்றாயே
அவ்வலைகள் விண் கடலினுள்
அமிழ்த்து விட்டனவோ
அருகே கண் சிமிட்டிச் சிரிக்கும்
அழகிய விண்மீன்கள்
இறுக்கும்போது பயமேன்
சுரிய மீனவன்
தன் கதிர்த் தூண்டிலை
விண்கடலில் வீசும் போது
நீயும் விண்மீன்களும்
மறையும் மாயமென்ன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment